முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Jai - Atlee: அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்?

Jai - Atlee: அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்?

ஜெய் - அட்லீ

ஜெய் - அட்லீ

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய படத்திற்காக இயக்குநர் அட்லீவுடன் அவர் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  • 1-MIN READ
  • Last Updated :

ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லியின் இயக்கத்தில் ஜெய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

'சென்னை 600028', 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' மற்றும் 'கலகலப்பு 2' போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் ஜெய். 'ராஜா ராணி' படத்தில் தன் காதலை தியாகம் செய்து அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், ஜெய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் பாராட்டப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று.

இப்போது அவரது ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய படத்திற்காக இயக்குநர் அட்லீவுடன் அவர் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அட்லீ தனது மனைவி பிரியாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது முதல் தயாரிப்பாக 'சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற படம் வெளி வந்தது. ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்தப் படத்தில், ஜெய் ஒரு சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்தப் படத்தை அட்லீயின் உதவியாளர் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Atlee