Home /News /entertainment /

Jailer: ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஜெய்?

Jailer: ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஜெய்?

ரஜினிகாந்த் - ஜெய்

ரஜினிகாந்த் - ஜெய்

ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதற்கிடையே ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் நடிகர் ஜெய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைப்பு குறிப்பிடுவது போல இதில் ரஜினி ஜெயிலராக நடிக்கிறார். அவருடன் ஜெய் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆனால் அவருடைய கதாபாத்திரம் குறுகியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் 'ஜெயிலர்' படத்தின் நட்சத்திர நடிகர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் கேமராவை கவனிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் ஹைதராபாத் செல்லவுள்ளது.

    குழந்தை கட்டாயம் வேணும்... திருமணத்திற்கு முன்பு ரவீந்தருக்கு கண்டிஷன் போட்ட மகாலட்சுமி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே ஜெய் தற்போது, 'காபி வித் காதல்' படத்தில் நடித்துள்ளார். சுந்தர் சி எழுதி இயக்கியுள்ள, இப்படம் அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய் தமிழில் மேலும் நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி