ஜே.கே.ரித்திஷ் மரணம்: வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை - ஆர்.ஜே.பாலாஜி

Web Desk | news18
Updated: April 13, 2019, 7:44 PM IST
ஜே.கே.ரித்திஷ் மரணம்: வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை - ஆர்.ஜே.பாலாஜி
ஜே.கே.ரித்திஷ் | ஆர்.ஜே.பாலாஜி
Web Desk | news18
Updated: April 13, 2019, 7:44 PM IST
ஜே.கே.ரித்திஷின் மரணம் குறித்த தனது சமூகவலைதள பதிவில், வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி

தி.மு.கவின் ராமநாதபுர மாவட்டச் செயலாளராக இருந்த சுப.தங்கவேலனின் பேரன் ஜே.கே.ரித்திஷ். 2009-ம் ஆண்டு தி.மு.க சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் மூலம், 2009-2014-ம் ஆண்டு காலகட்டத்தில் தி.மு.கவின் எம்.பியாக செயல்பட்டுவந்தார். அந்த நேரத்தில் கதாநாயகன், பெண் சிங்கம் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தி.மு.கவில் இருந்த ஜே.கே.ரித்திஷ் அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். பின்னர், தி.மு.கவிலிருந்து விலகிய ஜே.கே.ரித்திஷ், 2014-ம் ஆண்டில் அ.தி.மு.கவில் இணைந்தார். சமீபத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற எல்.கே.ஜி. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அரசியல் மட்டுமல்லாது, திரைத்துறை வட்டாரத்திலும் முக்கிய பிரமுகராக செயல்பட்டு வந்தார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டுவந்தார். சமீபத்தில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போடப்பட்ட விவகாரத்தில், விஷால் அணிக்கு எதிரணியில் முக்கிய நபராக ஜே.கே.ரித்திஷ் செயல்பட்டார்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள போகளூரில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜே.கே.ரித்தீஷூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மரணம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, 'ஜே.கே. ரித்தீஷின் திடீர் இறப்பால் அதிர்ச்சியடைந்து நொறுங்கிவிட்டேன். இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு வயது 46 தான் ஆகிறது. இவ்வளவு சிறு வயதிலா மரணம்? அவர் எனக்கு சகோதரர் போன்றவர். பலரது வாழ்க்கையை மாற்ற உதவியவர். வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை'' என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: நட்புக்காக ஓட்டு கேட்டு வந்தேன் - சமுத்திரகனி


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...