ஜே.கே.ரித்திஷ் மரணம்: நல்ல தம்பியை இழந்துவிட்டேன்... நாசர் இரங்கல்

news18
Updated: April 13, 2019, 6:22 PM IST
ஜே.கே.ரித்திஷ் மரணம்: நல்ல தம்பியை இழந்துவிட்டேன்... நாசர் இரங்கல்
ஜே.கே.ரித்திஷ்| நாசர்
news18
Updated: April 13, 2019, 6:22 PM IST
நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மறைவுக்கு நடிகர் சங்கத்தலைவர் நாசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி.மு.கவின் ராமநாதபுர மாவட்டச் செயலாளராக இருந்த சுப.தங்கவேலனின் பேரன் ஜே.கே.ரித்திஷ். 2009-ம் ஆண்டு தி.மு.க சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் மூலம், 2009-2014-ம் ஆண்டு காலகட்டத்தில் தி.மு.கவின் எம்.பியாக செயல்பட்டுவந்தார்.

தி.மு.கவில் இருந்த ஜே.கே.ரித்திஷ் அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். பின்னர், தி.மு.கவிலிருந்து விலகிய ஜே.கே.ரித்திஷ், 2014-ம் ஆண்டில் அ.தி.மு.கவில் இணைந்தார்.


அரசியல் மட்டுமின்றி திரைத்துறையில் சின்ன புள்ள படத்தின் மூலம் அறிமுகமாகி சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் 46 வயதான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து  பேட்டியளித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், ரித்திஷின் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ரித்திஷ் உடல்நிலையில் அக்கறை செலுத்துவார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் அவருடன் பயணித்தேன். அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர். நல்ல தம்பியை இழந்துவிட்டேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: நட்புக்காக ஓட்டு கேட்டு வந்தேன் -சமுத்திரகனி

Loading...


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...