கலைஞரிடமும் என்னிடமும் அளப்பரிய அன்புகாட்டியவர் ஜே.கே.ரித்தீஷ் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

கலைஞரிடமும் என்னிடமும் அளப்பரிய அன்புகாட்டியவர் ஜே.கே.ரித்தீஷ் - மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: April 13, 2019, 7:15 PM IST
  • Share this:
நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 46.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ராமநாதபுரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், எனது நண்பருமான ஜே.கே.ரித்திஷ் இளம் வயதில் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த திமுக தலைவர் கலைஞரிடமும், என்னிடமும் அளப்பரிய அன்பு காட்டிய ஜே.கே. ரித்திஷ் கழகத்தில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரச்னைகளை ஆணித்தரமாக நாடாளுமன்றத்தில் வாதிட்டவர்.


நாளடைவில் வேறு இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டாலும், தனது பழைய நட்பை மறந்து விடாமல் தொடர்ந்து பாசத்துடன் பழகியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க: நட்புக்காக ஓட்டு கேட்டு வந்தேன் - சமுத்திரகனி
சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading