"நான் யாரை சந்தேகப்படுவது?” 42 சவரன் தங்க நகைகளை பறிகொடுத்த இமான் அண்ணாச்சி வேதனை

”வீட்டின் கதவு உடைக்கப்படவில்லை. பீரோ உடைக்கப்படவில்லை. ஆனால், நகை மட்டும் காணாமல் போயுள்ளது”

நடிகர் இமான் அண்ணாச்சி
  • News18
  • Last Updated: April 24, 2019, 1:16 PM IST
  • Share this:
நடிகர் இமான் அண்ணாச்சியின் வீட்டில் 42 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் வெங்கடகிருஷ்ணன் தெருவில் உள்ளது நடிகர் இமான் அண்ணாச்சியின் வீடு. புனித வெள்ளி அன்று வீட்டில் பீரோவில் வைத்த 42 சவரன் நகை காணாமல் போயுள்ளது நேற்று தெரியவந்தது.

இதனையடுத்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இமான் அண்ணாச்சி புகார் கொடுத்துள்ளார்.


வீட்டில் நகை காணாமல் போன தினத்தில் இருந்து இன்று வரை வீட்டில் அவரது உறவினர்கள் இருந்து வருகிறார்கள். வீட்டின் கதவு உடைக்கப்படவில்லை. பீரோ உடைக்கப்படவில்லை. ஆனால், நகை மட்டும் காணாமல் போயுள்ளது என்பது இமான் அண்ணாச்சியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுபற்றி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "புனித வெள்ளி அன்று நான் அணிந்திருந்த பிரேஸ்லெட், தங்க சங்கிலிகள் மற்றும் தங்க கைக்கடிகாரம் ஆகியவற்றை பர்சில் வைத்து பீரோவில் பூட்டி அதன் சாவியை நான் தான் வைத்து இருந்தேன். இவற்றின் மொத்த மதிப்பு 42 சவரன்.

இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி மாலை எனது நண்பரைப் பார்ப்பதற்காக வெளியே சென்று விட்டேன். அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் படப்பிடிப்பின் காரணமாக பிஸியாக இருந்ததால் நகையை பார்க்காமல் விட்டுவிட்டேன்.நேற்று பீரோவைத் திறந்து பார்த்தபோது நகை இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். வீட்டில் அனைவருமே இருந்தனர். நான் யார் மீது சந்தேகப்படுவது? அப்படி யார் மீதாவது சந்தேகப்பட்டால் அது பெரிய தவறு. இதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்." என்றார்.

ஹரிஷ் கல்யாணுக்கு இப்படி ஒரு ஜோடியா? - வைரலாகும் ரியா சக்ரபோர்த்தியின் புகைப்படங்கள்வீடியோ பார்க்க: சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் புதிய சர்ச்சை


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading