நடிகர் ஹரிஷ் உத்தமன் மலையாள நடிகை சின்னு குருவில்லாவை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டார்.
கேரள மாநிலம் மாவேலிக்கராவில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அவர்களது திருமணம் நடைபெற்றது. மலையாளத்தில் நார்த் 24 கதம், கசபா, லுக்கா சுப்பி போன்ற படங்களில் சின்னு நடித்துள்ள நிலையில், தனி ஒருவன், தொடரி, பைரவா, பாண்டிய நாடு, பாயும் புலி, டோரா, நட்பே துணை போன்ற பல படங்களின் மூலம்
தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஹரிஷ். கடைசியாக அவர் நடிப்பில் தீர்ப்புகள் விற்கப்படும் வெளியானது.
Jai Bhim: ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம்!
ஹரிஷ் இதற்கு முன்பு மும்பையைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் அம்ரிதா கல்யாண்பூரை 2018-ல் குருவாயூரில் வைத்து
திருமணம் செய்து கொண்டார். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துக் கொண்டனர். இருப்பினும், இருவரும் ஒரு வருடத்தில் பிரிந்தனர்.
வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!
இதற்கிடையே ஹரிஷ் - சின்னு குருவில்லாவின் திருமண
படம் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.