முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘எந்த நடிகரும் இந்தப் படத்தை நிராகரிக்க மாட்டார்கள்’ – தனது அடுத்த படம் குறித்து மனம் திறந்த ஹரிஷ் கல்யாண்

‘எந்த நடிகரும் இந்தப் படத்தை நிராகரிக்க மாட்டார்கள்’ – தனது அடுத்த படம் குறித்து மனம் திறந்த ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

Harish Kalyan Diesel : எனது படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது. இதற்காக நான் உடல் ரீதியாக என்னை மாற்றிக் கொண்டேன். – ஹரிஷ்

  • Last Updated :

தனது புதிய படம் குறித்து பேட்டி அளித்துள்ள இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் எந்த நடிகரும், தான் நடிக்கவுள்ள படத்தை தவிர்க்க மாட்டார்கள் என்றும், படத்தின் கதை அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் வெளிவந்த ப்யார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

இவர் அடுத்ததாக டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு ஆக்சன் – த்ரில்லர் ஜேனரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தனது புதிய படம் குறித்து ஹரிஷ் கல்யாண் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

இதையும் படிங்க - ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா...

டீசல் படத்தின் கதையை முழுமையாக கேட்டேன். இதுவரையில் எந்தப் படத்திலும் வெளிவராத அளவுக்கு இந்த கதை அமைந்துள்ளது. எனது முந்தைய படங்களில் இருந்து இந்த படம் மிகவும் மாறுபட்டதாக அமையும்.

டீசல் படத்தை எந்த நடிகரும் நிராகரிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு படத்தின் ஸ்க்ரிப்ட் சிறப்பாக உள்ளது. வடசென்னை, மாஃபியா, மோசடிகள் என இந்த படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும்.

எனது படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது. இதற்காக நான் உடல் ரீதியாக என்னை மாற்றிக் கொண்டேன்.

டீசல் படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. எனது பிறந்தநாளையொட்டி இரத்த தான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

எனது பிறந்த நாளையொட்டி 2018-ல் இருந்தே இதுபோன்ற பணிகளை செய்து வருகிறேன். கொரோனாவால் சில பணிகளை மேற்கொள்ளாத நிலையில், இந்தாண்டு அவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

top videos

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Actor Harish kalyan