காதலர் தின திட்டத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு - ஹரிஷ் கல்யாண்

காதலர் தின திட்டத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு - ஹரிஷ் கல்யாண்
நடிகர் ஹரிஷ் கல்யாண்
  • Share this:
தனது காதலர் தின திட்டம் குறித்த வீடியோவை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார்.

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அவர் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பின்னர் அவர் நடித்த பியார், பிரேமா, காதல் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து வெளியான தனுசு ராசி நேயர்களே திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து தாராள பிரபு, கசட தபற உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.


காதல் கதைகளில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், தனது காதலர் தின திட்டம் குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியிருக்கும் அவர், ஹரிஷ் கல்யாணாகிய எனக்கு ஒரு அடையாளம் கொடுத்தது ரசிகர்கள் தான். அதனால் உங்களுடன் தான் இந்த காதலர் தினத்தை செலவிடப் போகிறேன். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

இந்த விஷயம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதையும், உங்களுக்கு பிடித்தவற்றையும் #LoveFromHarishKalyan,  #HK என்ற ஹேஷ்டேக்கில் வீடியோவின் கீழ் கமெண்ட் பதிவிடுங்கள். அதை நிறைவேற்ற முயற்சிப்பேன். நானும் எனது குழுவும் உங்களுடன் தொடர்பில் இருப்போம். சர்ப்ரைஸ் காத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.மேலும் படிக்க: மாஸ்டர் செல்ஃபியில் கொடி பறக்குதா... இன்று நெய்வேலியில்... நாளை? அரசியல் பேசும் ரசிகர்கள்
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading