ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்!

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்!
ஹரிஷ் கல்யாண் - பிரியா பவானி சங்கர்
  • Share this:
‘பென்னி சூப்புலு’ என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஹரிஷ் கல்யாண் - பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் பெல்லி சூப்புலு. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

தருண் பாஸ்கர் இயக்கிய இந்தப் படம் சிறந்த தெலுங்குப் படம் உள்ளிட்ட இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது. மேலும் அம்மாநில அரசின் 2 நந்தி விருதுகளையும் இப்படம் பெற்றது.


இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்