அப்துல் கலாம் சொன்ன வழியில் பிறந்தநாள் கொண்டாடிய ஹரிஷ் கல்யாண் - பாராட்டிய விவேக்!

அப்துல் கலாம் சொன்ன வழியில் பிறந்தநாள் கொண்டாடிய ஹரிஷ் கல்யாண் - பாராட்டிய விவேக்!
பிறந்தநாள் கொண்டாடிய ஹரிஷ் கல்யாண்
  • News18
  • Last Updated: June 29, 2019, 7:00 PM IST
  • Share this:
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்ன வழியில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்தப் படத்தை அடுத்து பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி அவரை பெரும்பாலான மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வரும் இவர், அடுத்து 3 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.


இந்நிலையில் இன்று தனது 29-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் ஹரிஷ் கல்யாண். தனது பிறந்தநாளில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் காட்டிய வழியில் மரங்களை நட்டு வைத்திருக்கும் அவர், “இவ்வாறே என் பிறந்த நாளை தொடங்கியுள்ளேன் ! புரசைவாக்கம் நடுநிலைப்பள்ளியில் ! இதற்கு முன் மாதிரியாகவும், உதவியாகவும் இருந்த நடிகர் விவேக் அவர்களுக்கு நன்றி. உங்கள் நற்பணிகளை பின்பற்றி, இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக், “நன்றி ஹரிஷ் கல்யாண். உங்கள் பிறந்த நாளில் ஒரு மரம் பிறக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள். உதவி புரிந்த ட்ரீ பேங்க் இந்தியா, முல்லைவனத்திற்கும் மிக்க நன்றி. நாம் இணையும் “தாராளப்பிரபு” வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: நாயகிகள் ஜெயித்த கதை!

First published: June 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading