நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியின் கையை பிடித்திருக்கும் போட்டோவை வெளியிட்டு திருமண செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சில மாதங்களுக்கு முன்பு நிக்கி கல்ராணி-ஆதி பின்னிசெட்டி மற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரின் இரண்டு பிரமாண்ட திருமணங்கள் நடந்தது. இந்த இரண்டு திருமணங்களும் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண். அவர் 2010-ல் 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார். இதற்கிடையே ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியானது. ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
To new auspicious beginnings ❤️#HappyVijayadashami #HappyDussehra #HappyAyudhaPooja pic.twitter.com/vN2jwNvbjl
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022
அதோடு ஹரீஷ் கல்யாண் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இதையடுத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் திருமணம் நடக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஹரீஷ். வருங்கால மனைவியின் கையைப் பிடித்திருக்கும் படத்தைப் பதிவிட்டு, ’புதிய தொடக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மணப்பெண் யார்? எப்போது திருமணம் என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து ஹரீஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Harish Kalyan, Tamil Cinema