முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருமணத்திற்கு தயாரான ஹரிஷ் கல்யாண்... மணப்பெண் யார் தெரியுமா?

திருமணத்திற்கு தயாரான ஹரிஷ் கல்யாண்... மணப்பெண் யார் தெரியுமா?

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் தனது திருமண அறிவிப்புகளை விரைவில் வெளியிடவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Last Updated :

நடிகர் ஹரீஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் நிக்கி கல்ராணி-ஆதி பின்னிசெட்டி மற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரின் இரண்டு பிரமாண்ட திருமணங்களை தமிழ் சினிமா கண்டுள்ளது. இந்த இரண்டு திருமணங்களும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவை ஒருபுறமிருக்க, ​​சமீபத்திய அறிக்கையின்படி, ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண். அவர் 2010-ல் 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார். இதற்கிடையே ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகின்றன. ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கள் 31 வயது மகனின் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹரிஷ் தனது திருமண அறிவிப்புகளை விரைவில் வெளியிடவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் கடைசி வாரத்திலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ அவரின் பிரம்மாண்ட திருமணம் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஹரிஷின் மனைவி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தனுஷின் தாய் கிழவி பாடல் மீது எழுந்த புகார் - வரிகளை மாற்ற வலியுறுத்தல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக சசியின் இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், ஹரிஷ் கல்யாண் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

    First published:

    Tags: Actor Harish kalyan