ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உயிரிழப்பு..! ரசிகர்கள் அதிர்ச்சி

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உயிரிழப்பு..! ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் ஹரி வைரவன் உயிரிழப்பு

நடிகர் ஹரி வைரவன் உயிரிழப்பு

Actor Hari vairavan died | கடந்த சில தினங்களாகவே உடல் நலக்குறைவால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் ஹரி வைரவன் உடல் நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். 

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பிரபல காமெடி ஆன பரோட்டா காமெடியில் ஹரிவைரவன் நடித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், இரவு 12.15 மணியளவில் உயிரிழந்ததாக நடிகர் அம்பானி சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் "ஹரி வைரவன் " இன்று காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மதுரையை சேர்ந்த ஹரிவைரவன் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலையில் அதிக அளவு பிரச்சனை இருந்த காரணத்தினால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வந்த, ஹரி வைரவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதுரையில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. முக்கிய நடிகர் மற்றும் நடிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor, Died, Vennila Kabaddi Kuzhu 2