ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காமெடி கிங் மீண்டும் வரார்... ஹீரோவாக புதிய படத்தில் நடிக்கும் கவுண்டமணி - ரசிகர்கள் உற்சாகம்

காமெடி கிங் மீண்டும் வரார்... ஹீரோவாக புதிய படத்தில் நடிக்கும் கவுண்டமணி - ரசிகர்கள் உற்சாகம்

பழனிசாமி வாத்தியார் பட பூஜையில் கவுண்டமணி

பழனிசாமி வாத்தியார் பட பூஜையில் கவுண்டமணி

இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காமெடி கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கவுண்டமணி. சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டிருக்கிறார். இருப்பினும் காமெடி சேனல்களில் இவர் தான் ஆக்கிரமித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இவரது கவுண்டர் டயலாக்குகளைத் தான் ரசிகர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் நடிகர் கவுண்டமணி. பழனிசாமி வாத்தியார் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை செல்வ அன்பரசன் இயக்குகிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் இந்தப் படத்தில் யோகி பாபுவும் நடிக்கிறார்.

பழனிசாமி வாத்தியார் பட பூஜையில் படக்குழுவினருடன் கவுண்டமணி

இந்தப் படத்துக்கு முகமூடி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவுண்டமணி கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பழனிசாமி வாத்தியார் பட பூஜையில் நடிகர் கவுண்டமணி

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Actor Goundamani, Yogi babu