சிக்ஸர் படக்குழுவுக்கு கவுண்டமணி நோட்டீஸ்!

சிக்ஸர் படக்குழுவுக்கு கவுண்டமணி நோட்டீஸ்!
கவுண்டமணி
  • News18
  • Last Updated: August 29, 2019, 6:39 PM IST
  • Share this:
தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும், வசனங்களையும் பயன்படுத்தியதாக கூறி சிக்ஸர் படக்குழுவுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வால்மேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் சிக்ஸர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சாக்‌ஷி இயக்கியுள்ளார். வைபவ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

முழுக்க காமெடியை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். ராதாரவி, இளவரசு, சதீஷ், ராமர் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


இந்தப் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியதாக கூறி படத்தின் தயாரிப்பாளர்கள், தினேஷ் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சின்னதம்பி படத்தில் கவுண்டமணி நடித்த கதாபாத்திரம் மற்றும் வசனங்களை தவறாக பயனபடுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கவுண்டமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Loading...

வீடியோ பார்க்க: விஜய்க்கு எதிராக களத்தில் குதிக்கும் கார்த்தி!


Photos: லண்டனில் கோட் ஷூட்டில் கெத்து காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!


First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...