’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணியின் பிறந்த நாளான இன்று அவரின் திரைப்பயணம் குறித்த சிறப்பு பதிவு.
வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் ஆரம்பித்த கவுண்டமணியின் காமெடி மராத்தானில் ’சின்ன வாத்தியார்’ திரைப்படம் கவுண்டமணியை காமெடியில் பெரிய வாத்தியார் என நிரூபித்தது.. காது கேட்கும் திறன் குறைந்த கோவை சரளா இடிச்சபுளி செல்வராஜ் இருவரிடமும் மாட்டி கொண்டு அல்லாடும் காட்சிகளில் அதகளம் செய்திருப்பார் கவுண்டமணி.
கவுண்டமணியின் கவுண்டர் ஸ்பெசல் நிறைந்த திரைப்படமாக அமைந்தது ’நாட்டாமை’ இத்திரைப்படத்தில் கவுண்டமணிக்கு தகப்பனாக வரும் செந்திலின் காதல் லீலைகளால் கவுண்டமணி படும் பாட்டை ஒரு பாட்டாகவே படிக்கலாம்.
’சூரியன்’ திரைப்படத்தில் ’டேய்…. நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா!’ என்பதும்….. ’இந்தப் பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்…’ என ஒரு கதாபாத்திரம் கவுண்டமணியை பார்த்து சொல்ல சற்றும் யோசிக்காமல் ’போய் எடு’ என சொல்வதும் ’குளிக்கிறையோ…….இல்லையோ.. நெத்தியில சிவகடாச்சம் மாதிரி பெரிய பொட்டு ஒன்னு வச்சுக்கற’ என இயக்குனரும் வசனகர்த்தாவும் யோசிக்காத வசனத்தை சொல்லி கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆனார்.
ஒரு முரட்டு காளையாக கவுண்டமணி நகைச்சுவையில் கலக்கிய திரைப்படம் ‘ஜல்லிகட்டுகாளை. செந்திலின் தகிடுதத்தத்தால் ’ஜம்பலக்கா பம்பா’ குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தின் காட்சிகளும் பெண்ணை நகைச்சுவையக வர்ணிப்பதும் ஜல்லிகட்டுகாளையை ஓட வைத்தது.
இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?
உத்தமராசாவில் ஒண்டி புலி, ஜெய்ஹிந்தில் போலீஸ் கோட்டை சாமி,, வியட்னாம் காலனியில் ஜோசப், கர்ணாவில் கல்னாயக், மேட்டுகுடியில் காளிங்கராயன், காதலர் தினத்தில் ஜாக் என ரசிகர்களின் மனதில் கவுண்டமணி பதியம் போட்ட கதாபாத்திரங்கள் நகைச்சுவை ரசிகர்களின் மனதில் என்றும் தங்கிடும் கல்வெட்டுகளே. கவுண்டமணி திரையில் தோன்றி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இருந்தாலும் அவரை 'நகைச்சுவை சக்கரவர்த்தி' என்று தான் ரசிகர்களும், சக கலைஞர்களும் குறிப்பிடுகின்றனர். இதுவே ஒரு அசலான கலைஞனின் வெற்றி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Goundamani, Kollywood, Tamil Cinema