உதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் ஷூட்டிங்கில் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார்.
கர்ணன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருவதால் மாமன்னன் படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
இதையும் படிங்க - எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 99 சதவீத மதிப்பெண்… பிரபல நடிகை அசத்தல்
இந்நிலையில் தென்னிந்தியாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஃபகத் ஃபாசில் மாமன்னன் படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். ஏற்கனவே முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் ஃபகத் ஃபாசிலுக்கு பூங்கொத்து கொடுத்து, படக்குழுவினர் வரவேற்கும் ஃபோட்டோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாமன்னன் படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க - விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் இதுதான்… ரசிகர்கள் திருப்தி
தமிழில் வெளிவந்த வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து, ஃபகத் ஃபாசில் கவனம் ஈர்த்திருப்பார். தொடர்ந்து, சூப்பர் டீலக்ஸ், புஷ்பா படங்களில் அவர் நடித்திருந்தார்.
தற்போது இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கமலின் விக்ரம் படத்தில் ஃபகத் ஃபாசில் இடம் பெற்றுள்ளார். படத்தில் அவருக்கு போதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் விக்ரம் படம் ஃபகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அட்வான்ஸ் புக்கிங் தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.