Home /News /entertainment /

புஷ்பா 3-ம் பாகம் உருவாகுமா? பகத் பாசில் அப்டேட்டால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகம்

புஷ்பா 3-ம் பாகம் உருவாகுமா? பகத் பாசில் அப்டேட்டால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகம்

புஷ்பா படத்தில் பகத் பாசில்

புஷ்பா படத்தில் பகத் பாசில்

Pusha Movie Update : முதல் பாகம் மெகா ஹிட் ஆனால் அடுத்த பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதற்கேற்ற வகையில் திரைக்கதையை இயக்குனர் சுகுமார் வடிவமைத்து வருகிறார்.

    புஷ்பா 3ம் பாகம் குறித்து நடிகர் பகத் பாசில் கொடுத்துள்ள அப்டேட்டால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அல்லு அர்ஜுனின்  நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா படத்தின்  முதல் பாகம் மெகா ஹிட்டானது.  இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    முதல் பாகத்தின்போதே அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அடுத்த பாகமாக புஷ்பாதி ரூல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

    முதல் பாகத்திற்காக முதலில் வன அதிகாரி வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அவரது படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட சிக்கலால் படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறினார். அந்த கேரக்டர் பகத் பாசிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    மறுபடியும் அஜித் படத்தை கமெண்ட் செய்து பேச்சு.. ஸ்ரீநிதிக்கு என்னதான் ஆச்சு? 

    முதல் பாகம் மெகா ஹிட் ஆனால் அடுத்த பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதற்கேற்ற வகையில் திரைக்கதையை இயக்குனர் சுகுமார் வடிவமைத்து வருகிறார்.

    முதல் பாகத்தில் புஷ்பா எப்படி உருவாகி, செம்மரக் கடத்தல் தொழிலில் டான் ஆகிறான் என்பதை விவரித்தது. 2ம் பாகம் வெளிநாடுகளிலும் புஷ்பாவின் செல்வாக்கு எப்படி அமைகிறது என்பதை விவரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வாய்ஸ் சரியில்லை என வாய்ப்பை இழந்த கமல்ஹாசன்!

    புஷ்பா 2 படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.  முதல் பாகத்தில் மிரட்டிய பகத் பாசில் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறார். முதல் பாகம் பான் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியானது. இரண்டாம் பாகத்தை இன்னும் கூடுதலாக சர்வதேச மொழிகளில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் புஷ்பா படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த பகத் பாசில், புஷ்பா படத்திற்கு 3ம் பாகம் வரை எடுக்கலாம். அந்த அளவுக்கு சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் படத்தில் இருக்கின்றன என்று இயக்குனர் சுகுமார் கூறியதாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக புஷ்பா படத்தின் 3ம் பாகமும் வெளிவர வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Tollywood

    அடுத்த செய்தி