முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஓணத்தையொட்டி வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’

ஓணத்தையொட்டி வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’

கிங் ஆஃப் கோதா படத்தில் துல்கர் சல்மான்

கிங் ஆஃப் கோதா படத்தில் துல்கர் சல்மான்

இதற்கு முன்பு கேங்ஸ்டர் கேரக்டரில் துல்கர் சல்மான் நடித்ததில்லை. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் ஆஃப் கோதா திரைப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் கடந்த 11  ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள திரையுலகில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக துல்கர் சல்மான் மாறியுள்ளார். இவரது நடிப்பில் தமிழில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதேபோன்று தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தென்னிந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட சீதாராமன் திரைப்படமும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

ஒவ்வொரு படங்களிலும் தனது தனித்துவமிக்க நடிப்பால், ரசிகர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இந்நிலையில் அடுத்ததாக அவர் கேங்ஸ்டர் கேரக்டரில் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்துவருகிறார். கிங் ஆப் கோதா என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் சில பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஓணத்தையொட்டி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.

விண்டேஜ் கேரக்டரில் பழைய ஜீப்பின் முன்பு, கையில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, சற்று கோபமான இளைஞனாக இந்த போஸ்டரில் துல்கர் சல்மான் காட்சியளிக்கிறார். இதற்கு முன்பு கேங்ஸ்டர் கேரக்டரில் துல்கர் சல்மான் நடித்ததில்லை. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக இதனை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

First published:

Tags: Dulquer Salmaan