Home /News /entertainment /

நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று

நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

துல்கரின் சல்யூட் படத்தின் வெளியீடு நாடு முழுவதும் கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    நடிகர் துல்கர் சல்மான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

    நடிகர் துல்கர் சல்மான் வியாழக்கிழமை லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அவரது தந்தை நடிகர் மம்மூட்டியும் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தார் துல்கர்.

    அதில், "எனக்கு இப்போது தான் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், எனக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் உள்ளன, ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். ஆகையால் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பின் போது என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், தயவுசெய்து தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



    துல்கரின் சல்யூட் படத்தின் வெளியீடு நாடு முழுவதும் கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்களுக்குத் தெரிவிக்கும் ஒரு பதிவையும் வெளியிட்டார் துல்கர். தவிர ஹே சினாமிகா, சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட், யுத்தம் தோ ரசினா பிரேம கதா ஆகியப் படங்களும் தற்போது அவர் கைவசம் உள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Mammootty

    அடுத்த செய்தி