Home /News /entertainment /

தி பேமிலி மேன் இயக்குனர்களின் வெப் தொடரில் நடிக்கும் துல்கர் சல்மான்!

தி பேமிலி மேன் இயக்குனர்களின் வெப் தொடரில் நடிக்கும் துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

சென்ற வருடம் கேரள திரையரங்குகளுக்கு லாபம் சம்பாதித்து தந்தது அவரது குருப் திரைப்படம்தான்

மலையாள நடிகர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என அகலக்கால் வைக்கையில் எந்த மொழியிலும் பிடிப்பு இல்லாமல் இரண்டாம், மூன்றாம்கட்ட நடிகர்களாக தேங்கிவிடுவதே இதுவரை சரித்திரமாக இருந்திருக்கிறது.

நரேன் மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருந்திருந்தால் பெரிய நடிகராகியிருப்பார். அவர் மலையாளத்துடன் தமிழிலும் நடித்ததே அவரது பின்னடைவுக்கு காரணம் என்று இப்போதும் சொல்கிறவர்கள் உண்டு.துல்கர் சல்மான் இப்படி மலையாளம், தமிழ், இந்தி என்று நடித்த போது இதையேதான் சொன்னார்கள். ஆனால், அவர்களின் கூற்றை பொய்யாக்கியுள்ளார் துல்கர்.

இதையும் படிங்க.. ரஜினியின் பேட்ட பட விவகாரம் : தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி மீது இரு பிரிவுகளில் வழக்கு!

சென்ற வருடம் கேரள திரையரங்குகளுக்கு லாபம் சம்பாதித்து தந்தது அவரது குருப் திரைப்படம்தான். இந்த வருடம் அவரது சல்யூட் திரைப்படம் அதேபோல் ஜாக்பாட் தரும் என நினைத்தனர். துரதிர்ஷ்டவசமாக கொரோனா காரணமாக படவெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மானின் அடுத்த தமிழ் வெளியீடு சினாமிகா. நடன இயக்குனர் பிருந்தா இயக்கியது. இது தவிர இந்தியிலும் சில படங்கள் நடித்துள்ளார். குருப் படத்தின் வெற்றி துல்கரை அடுத்தத் தளத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. நெட்பிளிக்ஸுக்காக தயாராகும் ராஜ் & டிகேயின் காமெடி த்ரில்லர் வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

இதையும் படிங்க.. ராக்கி படம் ஓடிடியில் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்!

ராஜ் & டிகே தி பேமிலி மேன் சீரிஸை உருவாக்கியவர்கள். அதன் இயக்குனர்கள். தற்போது விஜய் சேதுபதி, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிக்கும் வெப் தொடரை இயக்கி வருகின்றனர்.துல்கர் சல்மான் நடிக்கும் வெப் தொடரில் ராஜ்குமார் ராவ், ஆதர்ஷ் கௌரா ஆகியோரும் நடிக்கின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Malayalam actor, TV series

அடுத்த செய்தி