காரில் மதுபாட்டில்கள்... போதையில் நடிகர் ராஜசேகர் கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதா...?

காரில் மதுபாட்டில்கள்... போதையில் நடிகர் ராஜசேகர் கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதா...?
நடிகர் ராஜசேகர்
  • News18
  • Last Updated: November 15, 2019, 10:26 AM IST
  • Share this:
நடிகர் ராஜசேகரின் கார் விபத்துக்குள்ளான நிலையில், காரில் இருந்து இரண்டு மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழில் ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராஜசேகர். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும், இவரது மனைவி ஜீவிதாவும் பிரபல நடிகை ஆவார். ராஜசேகர் ஹைராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

ஷம்சாபாத் பகுதியில் சென்றபோது கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அக்கம் பக்கத்தினர் காருக்குள் சிக்கிய ராஜசேகரை வெளியே தூக்கினர். விபத்து குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னால் ராஜசேகரை வேறொரு காரில் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.


விபத்தில் சிக்கிய காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் இரண்டு மது பாட்டில்கள் இருந்துள்ளன. போலீசார் கூறுகையில் “அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. காரின் ஏர்பேக் ராஜசேகர் உயிரை காப்பாற்றி உள்ளது. நாங்கள் வருவதற்கு முன்பே அவர் புறப்பட்டு சென்று விட்டதால் மதுபோதையில் இருந்தாரா? என்பதை ஆய்வு செய்யமுடியவில்லை. காருக்குள் மதுபாட்டில் இருந்தது” என்றார்.
First published: November 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading