ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘ஊற்றெடுக்கும் கற்பனைகளிலிருந்து ஒரு படைப்பு…’ – அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட பார்த்திபன்…

‘ஊற்றெடுக்கும் கற்பனைகளிலிருந்து ஒரு படைப்பு…’ – அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட பார்த்திபன்…

நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன்

வெளிநாட்டில் சில சினிமா திருவிழாக்களில் இரவின் நிழல் படம் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தான் இயக்கப் போகும் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். இதுகுறித்த அவரது க்யூட்டான அப்டேட் கவனம் ஈர்த்துள்ளது.

  தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி, தனித்துவம் கொண்ட கலைஞராக பார்த்திபன் இருந்து வருகிறார். தமிழ் மொழியில் இவர் விளையாடும் வார்த்தை விளையாட்டுகள் பல்வேறு மேடைகளில் இடம்பெற்று வரவேற்பை பெற்றுள்ளன.

  பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரவின் நிழல் படம் நல்ல வரவேற்பை பெற்றது. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம் என்று இந்த படத்தை பார்த்திபன் கூறி வருகிறார்.

  வெளிநாட்டில் சில சினிமா திருவிழாக்களில் இரவின் நிழல் படம் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபனின் நடிப்பு கவனம் ஈர்த்தது.

  இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய பிரதமர் மோடி… குவியும் வாழ்த்து

  இந்தப் படத்தில் சின்ன பழுவேட்டரையராக சரத் குமாருக்கு தம்பியாக நடித்து கம்பீரமான நடிப்பை பார்த்திபன் வெளிப்படுத்தியிருந்தார். சில காட்சிகளிலேயே அவர் வந்தாலும் அவரது நடிப்பு நிறைவைப் பெற்றது.

  பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகத்திலும் பார்த்திபன் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் தான் இயக்கப்போகும் அடுத்த படத்திற்காக பார்த்திபன் தயாராகி வருகிறார்.

  அஜித்தின் துணிவு பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனத்தால் ரசிகர்கள் உற்சாகம்

  தற்போது கொச்சியில் இருக்கும் பார்த்திபன் அங்கிருந்து க்யூட்டான ஒரு பதிவை ட்விட்டரில் போட்டுள்ளார். அந்த பதிவில், ‘மெதுவே நகரும் பச்சை படகுகள் நடுவே … நாட்களை போலவே கடந்துச் செல்லும் அந்த கரும் படகு.இன்று கொச்சி,நாளை கோவை, நாளை மறுதினம் காங்கேயம். ஊர் ஊராய் ஊர்ந்து செல்கிறேன். ஊற்றெடுக்கும் கற்பனைகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் ஒரு படைப்பு விரைவில்….’ என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

  இந்த பதிவு கவனத்தை ஈர்த்து வருகிறது. விரைவில் தனது அடுத்த படத்தை பார்த்திபன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Parthiban, Kollywood