ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'’காலில் விழுந்து வாய்ப்பு பெற்றேன்’’ - பாக்யராஜிடம் உதவி இயக்குநர் ஆனது குறித்து பாண்டியராஜ்!

'’காலில் விழுந்து வாய்ப்பு பெற்றேன்’’ - பாக்யராஜிடம் உதவி இயக்குநர் ஆனது குறித்து பாண்டியராஜ்!

பாக்யராஜ் - பாண்டியராஜன்

பாக்யராஜ் - பாண்டியராஜன்

ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது கிளாப் அடித்து விட்டு, உடனடியாக ஓடி ஒளிந்துகொண்டேன். பாக்யராஜ் சார் யாரென்று சுற்றி சுற்றி பார்த்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாக்யராஜிடம் உதவியாளராக சேர்வதற்கு பட்ட கஷ்டங்கள் குறித்து நடிகர் பாண்டியராஜ் சுவாரசியமாக விவரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது-

  எனது இயக்குனர் பாக்யராஜின் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை பார்த்துவிட்டு இரவு முழுவதும் தூங்கவில்லை. அந்தப் படத்தில் இடம்பெற்ற கேரக்டர்கள் என்னை போலவே இருந்தார்கள். அதில் உள்ளவர்களின் வயதும் எனக்கு இணையாக இருந்தது. இதனை சினிமாவுக்குள் கொண்டுவந்து, ஜனங்களுக்கு புரியவைத்து, கைதட்டலை, பாராட்டை பெற்றார் பாக்கியராஜ்.

  ‘என்னடா இது! இப்படி ஒரு டைரக்டரா!’ என்று அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். அவர் என் மனதுக்குள்ளேயே இருந்தார். அடுத்த ஒரு வாரத்தில் அவரை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருக்கு உதவியாளராக அமைவதற்கு வாய்ப்பு வரும். ஆனால் சில மணி நேரங்களில் அந்த வாய்ப்பு பறிபோய்விடும்.

  நடிகை சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!

  பாக்யராஜ் எழுதிய டயலாக்கை காப்பி பண்ணக்கூடிய வேலை வந்தது. இதை அவரே எதிர்பார்க்காத அளவுக்கு, சிறப்பாக வடிவமைத்து அவரிடம் கொடுத்தேன். அவர் ஆச்சரியத்துடன் பார்த்து என்னை ‘வாங்க போங்க’ என்றார். அப்போது உதவியாளராக சேர இன்னொரு இயக்குனர் பரிந்துரைத்த போது, ‘என்னிடம் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்’ என்று ஒரு பாக்யராஜ் சார் மறுத்துவிட்டார்.

  இதன் பின்னர் பாக்யராஜ் சாரின் அசிஸ்டன்ட்களுக்கு என்னென்ன எடுபிடி வேலை பார்க்க வேண்டுமோ அத்தனையும் பார்த்து, அவர்களிடம் நல்ல பெயர் பெற்றேன். ஒருமுறை மதிய உணவு பாக்யராஜ் சார் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவரிடம் என்னை வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு கேட்டேன். அவர் கொஞ்சம் டென்ஷனாகி ‘நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்; என்னிடம் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் என்று’ கூறினார்.

  பின்னர் மௌனகீதங்கள் படப்பிடிப்பு அடையாறில் நடைபெற இருந்தது. அந்த இடத்திற்கு வரும்படி பாக்யராஜ் அசிஸ்டன்ட்கள் என்னிடம் சொன்னார்கள். அப்போது அவர் கண்ணில் படாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒதுங்கி இருந்தேன்.

  தனுஷ் – சிம்பு இணைந்து நடிக்கும் படம்?! புதிய தகவலால் பரபரப்பான கோலிவுட்!

  ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது கிளாப் அடித்து விட்டு, உடனடியாக ஓடி ஒளிந்துகொண்டேன். அவர் யாரென்று சுற்றி சுற்றி பார்த்தார். கடைசியாக என்னைக் கண்டுபிடித்து, ‘உன்னை யார் கிளாப் அடிக்க சொன்னது?’ என்று கேட்டார்.

  திடீரென அவரது காலில் விழுந்து, ‘நான் அப்பா இல்லாத பையன் சார். எப்படியாவது எனக்கு தொழில் கற்றுக் கொடுங்கள்.’ என கெஞ்சத் தொடங்கினேன். இதனை படக்குழுவினர் பரிதாபமாக பார்த்தனர். பாக்யராஜ் சார் சுற்றிலும் பார்த்துவிட்டு, ‘சரி சரி கண்டின்யு பண்ணு’ என்றார். அன்று தான் என் வாழ்க்கை தொடங்கியது.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood