முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 4 நாள் சாப்பிடல.. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்துட்டேன் - உருக்கமாக பேசிய எதிர்நீச்சல் மாரிமுத்து

4 நாள் சாப்பிடல.. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்துட்டேன் - உருக்கமாக பேசிய எதிர்நீச்சல் மாரிமுத்து

மாரிமுத்து

மாரிமுத்து

தான் உதவி இயக்குநராக பணியாற்றியபோது நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோர்களுடன் பழகிய அனுபவங்கள் உள்ளிட்ட பல சுவாரசியமான தகவல்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் பார்வையாளர்கள் பெரும் ஆதரவளித்துவருகின்றனர். இந்தத் தொடரில் எதிர்மறை வேடத்தில் நடிகர் மாரிமுத்து அசத்திவருகிறார். மதுரை ஸ்லாங்கில் அவர் பேசும் தோரணையே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிரசன்னா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும், விமல், பிரசன்னா நடித்திருந்த புலிவால் ஆகிய படங்களை இயக்கியது மாரிமுத்துதான். மேலும் பாடலாசிரியர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, இயக்குநர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

தான் உதவி இயக்குநராக பணியாற்றியபோது நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோர்களுடன் பழகிய அனுபவங்கள் உள்ளிட்ட பல சுவாரசியமான தகவல்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதில், உதவியாளராக பணியாற்றியபோது ஒரு மேன்ஷனில் தங்கியிருந்ததாகவும், காசு இல்லாத அந்த நேரத்தில் நண்பர்கள் உதவியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஒருமுறை தீபாவளி பண்டிகையின்போது நண்பர்கள் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டதாகவும் வழக்கமாக அக்கவுண்ட் வைத்து சாப்பிடும் ஹோட்டலும் விடுமுறைவிடப்பட்டதாகவும் இதனால் சாப்பாடு கூட இல்லாமல் தவித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

3 நாட்கள் சாப்பிடாமல் வெறும் ஊர்காயை சாப்பிட்டு தண்ணீர் மட்டும் குடித்ததாகவும் 4வது நாள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும், அதைத்தொடர்ந்து வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் மருத்துவமனையில் சேர்த்தாகவும் அங்கு குளுகோஸ் ஏற்றிய பிறகு சற்று தேறியதாகவும் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.

First published:

Tags: Sun TV