Home /News /entertainment /

பிரபல நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி

ஜி.எம்.குமார்

ஜி.எம்.குமார்

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஜி.எம்.குமார்.

    பிரபல நடிகரும், இயக்குநருமான ஜி.எம்.குமார் உடல்நலக் குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அறுவடை நாள், பிக் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகியப் படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார். அதோடு கன்னிராசி, காக்கி சட்டை, மை டியர் மார்த்தாண்டன் ஆகியப் படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். அதோடு குருவி, அவன் இவன், தாரை தப்பட்டை, கர்ணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

    தவிர, பூவே உனக்காக, செம்பருத்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ள ஜி.எம்.குமார், நவம்பர் ஸ்டோரி, பேப்பர் ராக்கெட் போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜி.எம்.குமார் தற்போது திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் சேதுபதி?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதைத் தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி