படப்பிடிப்பின்போது கீழே விழுந்த சேரன்.. தலையில் காயம்

சேரன்

நந்தா பெரியசாமி ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தை இயக்கி வருகிறார். திண்டுக்கல்லில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. கௌதம் கார்த்திக் நாயகனாகவும் முக்கிய வேடத்தில் சேரனும் நடித்து வந்தனர். 

  • News18
  • Last Updated :
  • Share this:
படப்பிடிப்பு தளத்தில் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் இயக்குனரும், நடிகருமான சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு எட்டு தையல்கள் போடப்பட்டன.

நந்தா பெரியசாமி ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தை இயக்கி வருகிறார். திண்டுக்கல்லில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. கௌதம் கார்த்திக் நாயகனாகவும் முக்கிய வேடத்தில் சேரனும் நடித்து வந்தனர்திருமணம் முடித்த கையோடு பாடலாசிரியர் சினேகன் இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் முதலில் கலந்து கொண்டார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.படத்தில் வீடு ஒன்று பிரதானமாக வருகிறது. அது கட்டப்பட்டு வரும் நிலையில் சேரன் அதில் ஏறி பார்ப்பது போல் காட்சி. மேலே ஏறியவர் கடைசி நிமிடத்தில் கால்இடறி கீழேவிழ தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

Also read... பிக்பாஸ் அல்லது குக் வித் கோமாளி... எதில் பங்கேற்க விருப்பம்? ரசிகர்களின் கேள்விக்கு இர்ஃபான் பதில்!உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டனமருத்துவமனையிலிருந்து திரும்பியவர், இயக்குனர் தடுத்தும் கேளாமல், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்திருக்கிறார். தற்போது திண்டுக்கல் ஷெட்யூல்ட் முடிந்து சேரனும், படக்குழுவும் சென்னை திரும்பிய நிலையில் இந்தத் தகவலை இயக்குனர் நந்தா பெரியசாமி வெளியிட்டுள்ளார்
Published by:Vinothini Aandisamy
First published: