நடிகர் தினேஷை துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்த கமாண்டோ படை!

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

Web Desk | news18
Updated: February 12, 2019, 10:19 PM IST
நடிகர் தினேஷை துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்த கமாண்டோ படை!
நடிகர் தினேஷ்
Web Desk | news18
Updated: February 12, 2019, 10:19 PM IST
இரவு நேரத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் தினேஷை கமாண்டோ படை வீரர்கள் வளைத்துப் பிடித்துள்ளனர்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஆக்‌ஷன் காட்சிகளைச் சண்டைப் பயிற்சியாளர் சாம் மற்றும் இயக்குநர் அதியன் ஆதிரை சென்னை புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் படமாக்கிக் கொண்டிருந்தனர்.

வேகமாக செல்லும் லாரியின் வெளியே தொங்கிக் கொண்டு தினேஷ் சண்டைபோடும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த போது கேமரா லாரியினுள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சண்டைக்காட்சியை பார்த்தவர்கள் நிஜமாகவே சண்டை நடக்கிறது என்று நினைத்துள்ளனர். அதேவேளையில் அந்நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே இரவு நேரத்தில் சண்டை நடக்கிறது என்று லாரியைச் சுற்றி வளைத்தனர்.

தினேஷை நோக்கி தங்களது துப்பாக்கியை திருப்பிய கமாண்டோ படை வீரர்கள் அவரை நோக்கி சென்று பார்த்தபோது படப்பிடிப்பி நடைபெற்று வருவதை புரிந்துகொண்டனர். கமாண்டோ படை வீரர்களின் நிஜ துப்பாக்கியைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் நடிகர் தினேஷ்.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்... களைக்கட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம்

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...