Dilip Kumar: அண்ணாவின் கடைசி பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட திலீப் குமார்!

திராவிட இயக்க தலைவர்களுடன் திலீப் குமார்

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் அன்றைய திராவிட முன்னேற்றக்கழக நிர்வாகிகளுடன் திலீப் குமார் நிற்கும் புகைப்படம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

  • Share this:
    பழம்பெரும் நடிகர் திலீப் குமார் இன்று அதிகாலை மரணமடைந்தார். அதனையொட்டி அவரது நினைவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் என்பதைத் தாண்டி பாகிஸ்தான் - இந்தியா நல்லுறவுக்கு பாலமாகவும் அவர் பலமுறை இருந்துள்ளார்.

    எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கானுடன் திலீப் குமார் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் எல்லை காந்தி, திலீப் குமாருடன் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்களும் இருக்கிறார்.

    Actor Dilip Kumar attended Former CM Annadurai last public event
    திராவிட இயக்க தலைவர்களுடன் திலீப் குமார்


    1969-ல் அண்ணா முதலமைச்சாராக இருந்த போது, கலைவாணர் என்எஸ் கிருஷ்ணனுக்கு சென்னையில் சிலை திறக்கப்பட்டது. அப்போது அண்ணா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். எனினும், கலைவாணரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வேன் என வலியை மீறி வந்து கலந்து கொண்டார். 14-01-1969 இந்த நிகழ்ச்சி நடந்தது. அதுதான் அண்ணா கலந்து கொண்ட கடைசி பொதுநிகழ்ச்சியாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த விழாவுக்கு மும்பையிலிருந்து நடிகர் திலீப் குமாரும் வந்திருந்தார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் அன்றைய திராவிட முன்னேற்றக்கழக நிர்வாகிகளுடன் திலீப் குமார் நிற்கும் புகைப்படம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அண்ணா மறைந்த போது அவரது இறுதிச்சடங்கிலும் திலீப் குமார் கலந்து கொண்டார் என்பது முக்கியமானது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: