• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay Sethupathi - Dhruv Vikram: விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் - வைரலாகும் படம்!

Vijay Sethupathi - Dhruv Vikram: விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் - வைரலாகும் படம்!

விஜய் சேதுபதி - துருவ் விக்ரம்

விஜய் சேதுபதி - துருவ் விக்ரம்

நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்ததை, செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார்.

  • Share this:
    நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்ததை, செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார்.

    துருவ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் படத்தை வெளியிட்டு, 'இந்த அழகான மனிதரை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி' என்று தலைப்பிட்டுள்ளார். இருவரும் ஒரு பொது இடத்தில் சந்தித்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த துருவ் விக்ரமின் ரசிகர்கள் விரைவில் அந்தப் படத்தைப் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர். இப்போது அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்தப் படம், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் துருவ் விக்ரமின் அடுத்தப் படத்தில், விஜய் சேதுபதியும் நடிப்பார் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.



    பிரபல நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் 'ஆதித்யா வர்மா' படம் மூலம் அறிமுகமானார். தற்போது 'சியான் 60' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் துருவ். மேலும் இந்த படத்தில் பல பிரபல நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் துருவ் தனது தந்தை சியான் விக்ரமுடன் முதன் முதலாக திரையைப் பகிர்ந்துக் கொள்கிறார்.

    7 ஸ்கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: