Home /News /entertainment /

விக்ரமின் எனர்ஜிக்கான காரணம் இதுதான்… அப்பா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய துருவ்…

விக்ரமின் எனர்ஜிக்கான காரணம் இதுதான்… அப்பா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய துருவ்…

துருவ் - விக்ரம்

துருவ் - விக்ரம்

Cobra Trailer : 3 வருடங்களுக்கு முன்பு, அஜய் ஞானமுத்துவின் கற்பனை மற்றும் எண்ணத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அதற்காக இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று விக்ரம் கூறியதாக துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நடிகராவதற்கு நிறைய கஷ்டங்களையும்,  போராட்டங்களையும் தாண்டி வந்ததால் சோர்வடைவதில்லை என தன்னுடைய தந்தை  கூறியதாக துருவ் விக்ரம் தெரிவித்தார்.

திருச்சி, மதுரை, கோவை மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாத சிறந்த அனுபவமாக இருந்தது என நடிகர் விக்ரம் கோப்ரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில் கூறியுள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது.  இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விக்ரம் நடிகைகள் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி  ஆகியோர் சென்றிருந்தனர்.

ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு படத்திலிருந்து 2-வது பாடல் வெளியீடு...

அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அது குறித்து சென்னையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்  பேசிய நடிகர் விக்ரம்,  திருச்சி - மதுரை - கோவை ஆகிய இடங்களில் மக்கள் காட்டிய அன்பு சிறந்த அனுபவமாக இருந்தது.  நீண்ட இடைவெளிக்குபின் ரசிகர்களை சந்திக்கிறேன் என தெரிவித்தார்.

இதேபோல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும்கூறினார். அந்த நிகழ்வில் நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மூன்று வருடங்களுக்கு முன்பு, அஜய் ஞானமுத்துவின் கற்பனை மற்றும் எண்ணத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அதற்காக இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று அப்பா கூறினார். அதேபோல் மகான் படப்பிடிப்பில் சில காட்சிகளில் நான் சோர்வடைந்தேன். ஆனால் அப்பா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் எனர்ஜியாகவே இருந்தார்.

அது எப்படி என்று அவரிடம் கேட்டேன். அதற்கு நடிகராக பல கஷ்டங்களையும்,  போராட்டங்களையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனவே இதெல்லாம் சாதாரணம் என்று கூறினார் என துருவ் விக்ரம் நெகிழந்தார். மேலும் அதை அவரிடம் இருந்து தானும் கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் மிருணாளினி ரவி பேசுகையில் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் போது இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்துள்வதாக கூறினார். அதேபோல் விக்ரமின் ரசிகராக அவரின் படங்கள் பார்த்துள்ளேன். தற்போது அவருடனே பணியாற்றியுள்ளேன். அப்போது அவரிடம் கற்றுக்கொண்டதை மறக்க மாட்டேன் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகி ஸ்ரீநிதி செட்டி மற்றும் மீனாட்சி கோவிந்தராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Published by:Musthak
First published:

Tags: Actor Vikram, Dhruv Vikram

அடுத்த செய்தி