ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

”அழுக்கு, அறிவில்லாதவன், ரவுடிசம் என்பதுதான் வட சென்னைக்கு அடையாளமா? - நடிகர் தீனா ஆவேசம்!

”அழுக்கு, அறிவில்லாதவன், ரவுடிசம் என்பதுதான் வட சென்னைக்கு அடையாளமா? - நடிகர் தீனா ஆவேசம்!

நடிகர் தீனா

நடிகர் தீனா

வட சென்னைல சிகரத்தைத் தொடுவது மிகவும் கஷ்டம். தொடவே விட மாட்டாங்க. அவங்களை பொறுத்த வரை ஒன்னு ரௌடிப் பயனு சொல்வாங்க. இல்ல அறிவு இல்லனு சொல்வாங்க.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் குடிநீர்த் தொட்டி மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அந்த கிராமத்தில் டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை கடைபிடிக்கப்பட்டுவந்திருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்தார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இந்த நிகழ்வு குறித்து பேசியதாவது, தமிழ்நாடு சமூக நீதி பேசும் மாநிலம் என்று சொல்லுகிற அதே சமயத்தில்தான் சாதி ரீதியான பிரச்னைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நடந்த இந்த புதுக்கோட்டை சம்பவம் தற்போது வெளியில் தெரிந்துள்ளது. ஆனால் வெளியில் தெரியாத நிகழ்வுகள் பல மாவட்டங்களில் இருக்கிறது. குறிப்பாக புதுக்கோட்டை, திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாதி ரீதியான கொடுமைகள் அதிகம் நடப்பதாக ஒரு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் சாதி குறித்து நடிகர் தீனா பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அவர் பேசியிருப்பதாவது, '' இங்க எல்லோரும் பெரும் சிகரத்தை நோக்கினு பேசுனாங்க. வட சென்னைல சிகரத்தைத் தொடுவது மிகவும் கஷ்டம். தொடவே விட மாட்டாங்க. அவங்களை பொறுத்தவரை ஒன்னு ரௌடிப் பயனு சொல்வாங்க. இல்ல அறிவு இல்லனு சொல்வாங்க. அப்படியும் இல்லனா வட சென்னைல இருக்கிறவங்கள அழுக்குனு சொல்வாங்க. ஆனா எங்கள் ஊரில் மனிதநேயம் இருக்கிறது. மதுரை உள்ளிட்ட எந்த ஊருக்கு போனாலும் எங்கள் ஊரை பற்றி சொல்வேன். எங்க ஊருக்கு வந்து பாருடா, சாதினு ஒன்னு இருக்கவே இருக்காதுடா. மதம்னு ஒன்னு இருக்கவே இருக்காதுடா. மனித நேயம்தான் எங்கள் அடையாளம். கீழ விழுந்துட்டா நூறு பேர் வந்து தூக்குவாங்கடா.

ரோட்ல ஒருத்தன் அடிபட்டா, ஆம்புலன்ஸ் தேவையில்லை. எங்கள் ஊர்க்காரன் தோளில் தூக்கிப்போட்டுபோவான். உலகில் நாம தான் அதிசயம். நாம தொடுறதுதான் அதிசயம் அப்படினு அவங்க நினைக்கிறாங்க. எல்லாமே நம்ம கை கிட்டதா இருக்குது. நம்மளால முடியாதது எதுவுமே கிடையாது. உங்கள் விடா முயற்சி. அது ஸ்போர்ட்ஸோ, சினிமாவோ, கல்வியோ எதுவாக இருந்தாலும் தெளிவா படிங்க. எது உங்களுடைய கோலோ அதை நோக்கி ஓடிட்டே இருங்க. ஒருநாள் உங்களை திரும்பிப் பார்க்கும். இந்த ஊரோட சிஎம்-ஆ கூட நீங்க ஆக முடியும். தொடர்ச்சியாக ஓடிட்டே இருங்க. ஏனா இந்த பூமி வள்ளலார்ல இருந்து பட்டினத்தார்ல இருந்து எல்லோரும் நடந்து சென்ற பூமி என்று பேசியிருந்தார்.

First published:

Tags: Caste