புஷ்பா திரைப்படம் மெகா ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், தனுஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூலை குவித்துள்ளது. தற்போது வரையில் ரூ. 340 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக சினிமா வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க :
இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா பாசிட்டிவ்... பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல்
முதல் பாகத்தை தொடர்ந்து புஷ்பா 2ம் பாகத்தை இயக்குவதற்கான பணிகளில் சுகுமார் மூழ்கியுள்ளார். இதன்பின்னர் விஜய் தேவரகொண்டா, ராம்சரண் படங்களை சுகுமார் இயக்குகிறார்.
இதற்கிடையே, தெலுங்கு, தமிழ் 2 மொழிகளில் உருவாகும் வாத்தி திரைப்படத்தில், வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதன் பின்னர், சுகுமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. இந்த தகவலால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க :
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மாஸ் அப்டேட்!
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகிறது. இதேபோன்று, தனுஷ் தனது ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். வாத்தி படத்தை தவிர்த்து, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க :
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் படம்!
இயக்குனர் சுகுமார், தனுஷ் ஆகியோர் இணையும் படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.