ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Sir Teaser : தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் தனுஷ் பட டீசர்

Sir Teaser : தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் தனுஷ் பட டீசர்

சார் படத்தில் தனுஷ்

சார் படத்தில் தனுஷ்

தமிழ் ரசிகர்களுக்கு இணையாக தெலுங்கு சினிமா ரசிகர்களையும் தனுஷ் பட டீசர் ஈர்த்திருக்கிறது. இதற்கு யூடியூபில் லைக் மற்றும் வியூஸ்களே சான்றாக உள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தனுஷ் நடித்துள்ள சார் படத்தின் டீசர் (Sir Teaser) தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார். தமிழில் இந்தபடத்திற்கு வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

  இதில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவராக, ஆசிரியராக தனுஷ் கவனம் ஈர்த்துள்ளார். டீசரைப் பார்க்கும் போது வில்லன் கேரக்டரில் சமுத்திரக் கனி நடித்திருப்பதை யூகிக்க முடிகிறது.

  தி லெஜெண்ட் பட நாயகி ஊர்வசி ரவுத்தலா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்…

  வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ், சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள வாத்தி படத்திற்கு எடிட்டிங் நவின் நூலி, ஒளிப்பதிவு யுவராஜ், சண்டை காட்சிகள் வெங்கட் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

  இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள முன்னணி நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ‘படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி… குடுங்க. ஃபைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க…’ என தனுஷ் தெலுங்கில் பேசும் வசனத்துடன் டீசர் நிறைவடைகிறது.

  சார் டீசரைப் பார்க்க...

  படத்தில் தனுஷுடன்சம்யுக்தா மேனன், சாய் குமார், தணிகெல்ல பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  தமிழ் ரசிகர்களுக்கு இணையாக தெலுங்கு சினிமா ரசிகர்களையும் தனுஷ் பட டீசர் ஈர்த்திருக்கிறது. இதற்கு யூடியூபில் லைக் மற்றும் வியூஸ்களே சான்றாக உள்ளன.

  சார் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனுஷ் சூப்பர் என்ட்ரியை  கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor dhanush