Home /News /entertainment /

Vaathi Teaser : தனுஷ் நடிக்கும் வாத்தி பட டீசர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

Vaathi Teaser : தனுஷ் நடிக்கும் வாத்தி பட டீசர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

வாத்தி படத்தில் தனுஷ்

வாத்தி படத்தில் தனுஷ்

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் டப் செய்யாமல் தனுஷ் நேரடியாக நடித்து வரும் வாத்தி படத்தின் டீசர் (Vaathi Teaser)தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் (Vaathi Teaser) டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு மொழியில் சார் (Sir) என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    தனுஷ் பிறந்த நாளையொட்டி வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது 39வது பிறந்த நாளையொட்டி நேற்றிலிருந்து தொடர் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

    நேற்று நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் டப் செய்யாமல் தனுஷ் நேரடியாக நடித்து வரும் வாத்தி படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட படம்!

    இதில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவராக, ஆசிரியராக தனுஷ் கவனம் ஈர்த்துள்ளார். டீசரைப் பார்க்கும் போது வில்லன் கேரக்டரில் சமுத்திரக் கனி நடித்திருப்பதை யூகிக்க முடிகிறது.

    இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள முன்னணி நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ‘படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி… குடுங்க. ஃபைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க…’ என்ற தனுஷ் பேசும் வசனத்துடன் டீசர் நிறைவடைகிறது.

    இந்த டீசரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். டீசர் வெளியான குறைந்த நேரத்தில் அதிக லைக்குகளை குவித்துள்ளது.

    டீசரைப் பார்க்க...



    படத்தில் தனுஷுடன்சம்யுக்தா மேனன், சாய் குமார், தணிகெல்ல பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ், சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள வாத்தி படத்திற்கு எடிட்டிங் நவின் நூலி, ஒளிப்பதிவு யுவராஜ், சண்டை காட்சிகள் வெங்கட் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி