முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: பணம் எப்படி வேணாம் சம்பாதிக்கலாம்... ஆனா, படிப்புதான் மரியாதைய சம்பாதிச்சு தரும் - 2 மில்லியன் பார்வைகளை கடந்த ’வாத்தி’ ட்ரெயலர்

WATCH: பணம் எப்படி வேணாம் சம்பாதிக்கலாம்... ஆனா, படிப்புதான் மரியாதைய சம்பாதிச்சு தரும் - 2 மில்லியன் பார்வைகளை கடந்த ’வாத்தி’ ட்ரெயலர்

வாத்தி

வாத்தி

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தின் ட்ரெய்லர் தற்போது இரண்டு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது யூடியூப்பில் இரண்டு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

' isDesktop="true" id="889117" youtubeid="FOEtbqbwS50" category="cinema">

நன்றி: Sun TV.

First published:

Tags: Tamil Movies Trailer