Home /News /entertainment /

ட்விட்டரில் 11 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற முதல் தமிழ் நடிகர்… சாதனை படைத்த தனுஷ்

ட்விட்டரில் 11 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற முதல் தமிழ் நடிகர்… சாதனை படைத்த தனுஷ்

தனுஷ்

தனுஷ்

நடிகர் விஜய்க்கு ட்விட்டரில் 4 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். ரஜினிகாந்தை 6.20 மில்லியன் அதாவது 62 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். சமந்தாவுக்கு 10 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் எந்த ஒரு தமிழ் நடிகரும் செய்யாத சாதனையை தனுஷ் செய்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    தனுசுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

    தனுஷ் நடித்த படங்களிலேயே மிகப்பெரும் வசூலை ஈட்டிய படமாக திருச்சிற்றம்பலம் மாறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அடுத்ததாக இம்மாதம் 29ஆம் தேதி, தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது.

    இளங்கோவால் கைதான அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

    தனுஷின் இந்த திரைப்படம் தமிழ் திரையுலகம் மிகவும் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் உடன் போட்டியிடும் என்பதால் இந்த படத்தின் வெளியீட்டை தனுஷ் ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளார்கள். இந்நிலையில் ட்விட்டர் சமூகவலைதளத்தில் தனுஷை பின்தொடர்வோர் எண்ணிக்கை 11 மில்லியன் அதாவது 1.10 கோடியை தாண்டியுள்ளது. இது தமிழ் நடிகர்கள் யாரும் செய்யாத சாதனையாக பார்க்கப்படுகிறது.



    நடிகர் விஜய்க்கு ட்விட்டரில் 4 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். ரஜினிகாந்தை 6.20 மில்லியன் அதாவது 62 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். சமந்தாவுக்கு 10 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

    வயல்வெளியில் இயற்கையை ரசிக்கும் நடிகை மாளவிகா மோகனன்.. வைரல் போட்டோஸ்

    நடிகர் சூர்யாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 8.1 மில்லியன் ஃபாலோயர்ஸாக உள்ளது. ட்விட்டரில் அதிக அளவில் ஃபாலோயர்ஸை பெற்றுள்ள தனுசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    இதற்கிடையே தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் திரைப் படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி