தனுஷ் பராக்... கார்த்திக் சுப்புராஜ் படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு - செல்வராகவன் வாழ்த்து!

news18
Updated: July 19, 2019, 3:01 PM IST
தனுஷ் பராக்... கார்த்திக் சுப்புராஜ் படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு - செல்வராகவன் வாழ்த்து!
தனுஷின் புதுப்படம்
news18
Updated: July 19, 2019, 3:01 PM IST
தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தை அடுத்து தனுஷ் படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். கேங்க்ஸ்டர் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்

இந்தப் படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.சசிகாந்த் தயாரிக்கிறார். இணைதயாரிப்பாளராக சக்கரவர்த்தி ராமச்சந்திரா இணைந்துள்ளார்.


படம் குறித்த அதிகாரப்பூர்வை வெளியிட்டிருக்கும் படக்குழு ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்துக்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குநராக பணிபுரிகிறார். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ்,  “என் மனதுக்கு நெருக்கமான கதையை படமாக்கி உங்களிடம் சமர்ப்பிக்க ஆவலாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் கூட்டணிக்கு இயக்குநர் செல்வராகவன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.வீடியோ பார்க்க: அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் கமல்
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...