• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய்க்காக பாடும் பிரபல நடிகர்...? - பீஸ்ட் சூப்பர் அப்டேட்

விஜய்க்காக பாடும் பிரபல நடிகர்...? - பீஸ்ட் சூப்பர் அப்டேட்

பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட் படத்துக்காக நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாட இருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன

  • Share this:
    பீஸ்ட் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு குறித்து சுவாரஸியமான தகவல் வெளியாகியுள்ளது.

    கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினர். இதற்காக பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கு அமைக்கப்பட்டது.

    மூன்றாம் கட்ட படப்பிடிப்பு முடிந்த சில தினங்களில் நான்காம்கட்ட படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கினர். இந்த ஷெட்யூல்டில் விஜய், பூஜா ஹெக்டே இடம்பெறும் டூயட் பாடலை படமாக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். அனிருத் இசையில் இந்தப் பாடல் தயாராகியுள்ளது.

    பீஸ்ட் படத்துக்காக நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாட இருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. விஜய்க்கு பொருந்தும் வகையில் தனது குரல் மாடுலேஷனை மாற்றி இந்தப் பாடலை அவர் பாடயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    beast, beast film, dhanush, beast dhanush, vijay dhanush, விஜய் தனுஷ், பீஸ்ட் தனுஷ், beast movie, beast vijay, thalapathy 65 first look poster, beast first look, thalapathy vijay, vijay beast, nelson dilip kumar, விஜய், பீஸ்ட், பீஸ்ட் படப்பிடிப்பு, நெல்சன் திலீப்குமார், விஜய் படங்கள், பீஸ்ட் போஸ்டர், பீஸ்ட் திரைப்படம், பீஸ்ட் விஜய்,
    பீஸ்ட் ஃபேன்மேட் போஸ்டர்


    ஆக்ஷன் என்டர்டெயினராக தயாராகி வரும் பீஸ்டுக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. 2022 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: