Home /News /entertainment /

ரிலீசுக்கு ரெடி… தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் அடுத்த அப்டேட்

ரிலீசுக்கு ரெடி… தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் அடுத்த அப்டேட்

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

டெலிவரி பாய் கேரக்டரில் தனுஷ் நடித்திருக்கும் இந்த படத்தை, மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். மித்ரன் ஜவஹர் இதற்கு முன்பாக தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி குட்டி உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

    கர்ணன் படத்தை தொடர்ந்து, ஓராண்டுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இடையே உருவான ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே, தி கிரே மேன் ஆகிய 4 படங்கள் ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக வெளியானது.

    இதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை அளித்திருக்கிறது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    பா ரஞ்சித் இயக்குனராகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவு.. அவர் கடந்து வந்த பாதை!

    அனிருத் இசையில் திருச்சிற்றம்பலம் பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படத்தில் தனுஷுடன் ராஷி கன்னா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    பீல் குட் மூவி ஜானரில் திருச்சிற்றம்பலம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ லான்ச் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த விழாவில் தனது தந்தை கஸ்தூரி ராஜாவை பாராட்டி தனுஷ் பேசியிருந்தார். விழாவில் பேசிய அனிருத் தனுஷ் இல்லாவிட்டால் நான் கிடையாது என்று எமோஷனலாக பேசி கவனம் ஈர்த்தார்.

    தேசிய கொடியுடன் பிரபலங்கள்... கவனம் பெறும் சுதந்திர தின படங்கள்!

    டெலிவரி பாய் கேரக்டரில் தனுஷ் நடித்திருக்கும் இந்த படத்தை, மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். படக்குழுவினருடன் திருச்சிற்றம்பலம் படத்தை தனுஷ் பார்த்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. படத்தின் அவுட்புட் திருப்திகரமாக உள்ளதென, தனுஷ் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.



    மித்ரன் ஜவஹர் இதற்கு முன்பாக தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி குட்டி உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி