Home /News /entertainment /

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் உருக்கமான பதிவு…

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் உருக்கமான பதிவு…

தனுஷ்

தனுஷ்

உங்களுடைய வாழ்த்துக்களையும் ஆதரவையும் கண்டு நான் நன்றியுடன் உணருகிறேன். விரைவில் உங்களை திரைப்படங்களில் சந்திக்கிறேன். - தனுஷ்

    பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி, நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு அவரது ரசிகர்களால், அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ஒரு பக்கம் ஹாலிவுட்டில் அறிமுகம், தனது முதல் படமான தி கிரே மேன் படத்திற்கு வரவேற்பு, அடுத்தடுத்து முக்கிய படங்களில் ஒப்பந்தம், அண்ணனுடன் நானே வருவேன் படம் என தனுஷின் திரையுலக வாழ்க்கை உற்சாகத்துடன் காணப்படுகிறது.

    இன்னொரு பக்கம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அவரது தனிப்பட்ட வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்துள்ளன. தனுஷ் மெகா ஹிட் படங்களை கொடுத்தாலும், அவரது படங்கள் வரவேற்பை பெறாவிட்டாலும் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.



    Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்னும் பெரிதாகவும், சிறப்பாகவும் இருக்கும் - உதயநிதி ஸ்டாலின்!

    அந்த வகையில், தனுஷ் கடைசியாக நடித்த தி கிரே மேன் உள்பட 4 படங்கள் திரையரங்கில் வெளிவராமல் ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியானது.

    இதற்கு சுமாரான வரவேற்பு கிடைத்த போதிலும், தனுஷ் ரசிகர்கள் அவர் மீது பேரன்பை செலுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று அவர் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இதையொட்டி நேற்று முன்தினத்திலிருந்து, ரசிகர்கள் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில் பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து தனுஷ் தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



    அந்த பதிவில், ‘இதை நான் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த என்னுடைய நலம் விரும்பிகள், நண்பர்கள், திரைத்துறையினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பும், ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி. எனது 20 ஆண்டுகால திரைப்பயணத்தில் அவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றனர். எனக்கு கிடைக்கும் ஆதரவுக்கு தூண்களாக இருப்பவர்கள் எனது ரசிகர்கள்.

    பாதுகாப்பு அளித்த போலீசாரை வீட்டிற்கு அழைத்து நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்...

    உங்களுடைய வாழ்த்துக்களையும் ஆதரவையும் கண்டு நான் நன்றியுடன் உணருகிறேன். விரைவில் உங்களை திரைப்படங்களில் சந்திக்கிறேன். அன்புடன் தனுஷ்“ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தனுஷ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

    ’ என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி