இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்

நடிகர் தனுஷ்

தான் நடிக்கும் 3-வது இந்திப் படமான ‘அத்ரங்கி ரே’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஏற்கெனவே ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக மீண்டும் ராஞ்சனா பட இயக்குநர் உடன் ‘Atrangi Re’ என்ற படத்தில் இணைந்தார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் நடைபெற்றது.

இதையடுத்து தற்போது டெல்லியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார். அதில் தனது புதிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்த போஸ்ட் ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்தப் படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் தனுஷ். 
View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)


மேலும் படிக்க: கோயிலில் முத்தமிடும் காதலர்கள் - நெட்ஃபிளிக்ஸில் வெளியான வெப் சீரிஸ்க்கு எதிர்ப்பு

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ‘ஜகமே தந்திரம்’ படம் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நவம்பர் 25-ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: