Home /News /entertainment /

actor dhanush: தயாரிப்பாளர்கள் கோரிக்கை..சம்பளத்தை குறைத்து கொண்டாரா தனுஷ்?

actor dhanush: தயாரிப்பாளர்கள் கோரிக்கை..சம்பளத்தை குறைத்து கொண்டாரா தனுஷ்?

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

actor dhanush salary : இதற்கு முன்பு நடிகர் தனுஷ் ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நடிகர் தனுஷ் தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

    தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன் நடிகர் தனுஷ் தமிழ், பாலிவுட், ஹாலிவுட் என உலக சினிமாக்களில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். முன்னணி நடிகராக வளர்ந்த பிறகும் மாஸ் படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல்
    கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் படம் இன்று (18.8.22) திரையரங்கில் வெளியாகிறது. தனுஷ் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

    இந்நிலையில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’ இன்று ரீலீஸ் ஆகியுள்ளது.

    நைட் பார்ட்டி.. ரோபோ சங்கருடன் நடனம்..வேற லெவல் செய்யும் வனிதா!

    இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கி சம்பள விவரம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே தெலுங்குத் தயா­ரிப்­பா­ளர்­கள் பல­ரும் படத் தயா­ரிப்­பால் பெரும் நஷ்டங்­க­ளை சந்தித்ததால் அவர்களின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண வலி­யு­றுத்­தி வேலை நிறுத்­தப் போராட்­டம் அறி­விக்­கப்­பட்­டது. தொடர்ந்து 15 நாட்கள் வரை இந்த போராட்டம் நடைப்பெற்றது. இதில் பல கோரிக்கைகளும்  முன் வைக்கப்பட்டன.

    பூஜை அறையில் கூட ஃபோட்டோவுக்கு போஸ்.. கேமரா அழகி ஷிவானி!

    அதில் கதா­நா­ய­கர்­கள் பல கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறு­வதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக தெலுங்கு முன்­னணி நடி­கர்­கள் சிலர் தங்­கள் ஊதி­யத்­தில் குறிப்­பிட்ட தொகையைக் குறைத்­துக் கொள்­ள முன் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதே போன்ற கோரிக்கைகளை தமிழ் பட தயாரிப்பாளர்களும் முன் வைத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு நடிகர் தனுஷ் ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடிகர் தனுஷ் ரூ. 15 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor dhanush, Kollywood, Tamil Cinema

    அடுத்த செய்தி