Home /News /entertainment /

நடிகர் தனுஷின் ‘Wunderbar’ பிலிம்ஸ் யூடியூப் சேனல் முடக்கம்… மீட்டெடுக்க நடவடிக்கை

நடிகர் தனுஷின் ‘Wunderbar’ பிலிம்ஸ் யூடியூப் சேனல் முடக்கம்… மீட்டெடுக்க நடவடிக்கை

தனுஷ்

தனுஷ்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேனல் ஆக்டிவாக இருந்ததால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமாக இருந்தது

நடிகர் தனுஷின் உண்டர்பார் (Wunderbar) யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட ரவுடி பேபி உள்பட பல்வேறு பாடல் மற்றும், காட்சிகள் யூடியூபில் இருந்து நீங்கியுள்ளன.

நடிகர் தனுஷ் உண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த பேனரின் கீழ் 3, வேலையில்லா பட்டதாரி, எதிர்நீச்சல், காக்கிசட்டை, நானும் ரவுடிதான், தங்கமகன் உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன.

உண்டர்பார் நிறுவனத்தின் கீழ், யூடியூப் சேனல் ஒன்று wunderbar films என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது. இதில் உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள், நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவை பதிவேற்றம் செய்து வரப்பட்டன.

இதையும் படிங்க - இசையில் மாய நதியை ஓட செய்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்… சூப்பர் ஹிட் பாடல்கள் தொகுப்பு…

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேனல் ஆக்டிவாக இருந்ததால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமாக இருந்தது. குறிப்பாக மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி வீடியோ பாடல் இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த பாடல் 120 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து இந்திய அளவில் சாதனை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், உண்டர்பார் பிலிம்ஸ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து, யூடியூபில் இந்த சேனல் மற்றும் ரவுடி பேபி பாடல்களை தேடியவர்களுக்கு அதிர்ச்சிதான் ரிசல்ட்டாக கிடைத்தது.

இதையடுத்து சேனல் முடக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக உண்டர்பாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தகவல் ஏதும் பகிரப்படவில்லை. இருப்பினும், முடக்கப்பட்ட யூடியூப் சேனலை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - அதிர்வலைகளை ஏற்படுத்திய விக்ரமின் முதல் பாடல்… இதுவரையில் கமல் சிக்கிய சர்ச்சைகள்… சிறப்பு தொகுப்பு

கார்ப்பரேட் நிறுவனமாக நடத்தப்பட்டு வரும் உண்டர்பாரின் சேனல் முடக்கப்பட்டிருப்பது தனிநபர் யூ டியூப் சேனல்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி