முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனுஷ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட்…

தனுஷ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட்…

தனுஷ்

தனுஷ்

Dhanush Thiruchitrambalam : தனுஷின் குட்டி, யாரடி நீ மோகினி படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனுஷ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

கடைசியாக சன்பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இந்தப் படம் வெற்றிப் பாதையில் திரும்ப வைக்கும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர் தரப்பு உள்ளது.

தனுஷுக்கும் கர்ணன் படத்திற்கு பின்னர் வெளிவந்த ஜெகமே தந்திரம், மாறன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஹாலிவுட் படமான தி கிரே மேனும் ஓடிடியில் நேரடியாக ரிலீஸாக உள்ளது.

இதையும் படிங்க - முன்னணி நடிகர்களுக்கு இணையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிரமாண்ட கட்-அவுட்…

இதனால் தனுஷ் தரப்பும் திருச்சிற்றம்பலம் படம் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

இந்த படத்தை தனுஷின் குட்டி, யாரடி நீ மோகினி படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கியுள்ளார். மாரி படத்திற்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க -  உதயநிதியுடன் மோதும் பகத் பாசில்… மாமன்னன் படத்தில் இந்த கேரக்டரில் நடிக்கிறாரா?

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பாரதி ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் குறித்த போஸ்டரை பதிவிட்டுள்ள தனுஷ், தன்னால் இந்த அப்டேட்டுக்காக காத்திருக்க முடியவில்லை என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

First published:

Tags: Anirudh, Dhanush, Sun pictures