சிவாஜியின் ஹிட் பட டைட்டிலில் தனுஷ்!

news18
Updated: August 5, 2019, 1:46 PM IST
சிவாஜியின் ஹிட் பட டைட்டிலில் தனுஷ்!
தனுஷ்
news18
Updated: August 5, 2019, 1:46 PM IST
தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கலில் நடித்திருந்தனர்.

சாதிய ஒடுக்குமுறையை திரையில் பேசிய இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் இணைந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்நிலையில் படத்துக்கு கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தனுஷ் தற்போது வெற்றிமாறனின் அசுரன் படத்திலும், துரை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் கார்த்திக் சுப்புராஜ், இயக்கும் படத்தில் நடிகர் தனுஷ் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

மாரி செல்வராஜ் - தனுஷ் இணையும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. அதேவேளையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படத்தின் டைட்டில் தனுஷுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வீடியோ பார்க்க: விஜய் சேதுபதியை புகழ்ந்த அதீதி ராவ்!

Loading...

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...