முகப்பு /செய்தி /entertainment / தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு...

தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு...

தனுஷின் மாறன்

தனுஷின் மாறன்

தனுஷ் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அத்ராங்கி ரே படமும் ஓடிடியில்தான் வெளியானது. இதனை தமிழில் கலாட்டா கல்யாணம் என்று டப் செய்திருந்தார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நேரடியாக இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது.

அசுரன் வெற்றிக்கு பின்னர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஒரு படத்தில் (மாறன் ) நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, கார்த்திக் நரேனின் மாபியா (அருண் விஜய்) திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. மாபியா படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஏனென்றால் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் அந்த அளவுக்கு இருந்தது. வலுவான திரைக்கதை மூலம், தமிழ் சினிமா உலக கார்த்திக் நரேன் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தப் படத்தை இயக்கியபோது, அவருக்கு 22 வயதுதான் இருக்கும்.

மாபியா படத்தின் சறுக்கலை தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸின் நவரசாவில், ப்ராஜெக்ட் அக்னி என்ற ஒரு பகுதியை இயக்கியிருந்தார். இது ஓரளவு பாராட்டைப் பெற்றது. இதற்கிடையே, அரவிந்த் சாமி, ஷ்ரேயா, சந்துப் கிஷன் உள்ளிட்டோரை வைத்து கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் திரைப்படம் முடங்கிப் போயுள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பதால், டிஸ்னி ஹாட்ஸ்டார் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

முன்னதாக தனுஷ் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அத்ராங்கி ரே படமும் ஓடிடியில்தான் வெளியானது. இதனை தமிழில் கலாட்டா கல்யாணம் என்று டப் செய்திருந்தார்கள்.

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது.

இதைத் தவிர்த்து, அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்திலும் தனுஷ் நடிக்கிறார்.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களை தொடர்ந்து, 16 ஆண்டுக்கு பின்னர் செல்வா, தனுஷ் கூட்டணி இணைந்துள்ளது.

First published:

Tags: Actor dhanush