தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வெளிவந்த வாத்தி திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது திருச்சிற்றம்பலம் திரைப்படம் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வாத்தி படமும் வெற்றி பெற்றிருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அங்கும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை பெற்றார். வாத்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. இந்த படத்திற்கு போட்டியாக பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகாத நிலையில் வசூலை வாத்தி திரைப்படம் அள்ளிக் குவித்துள்ளது. தற்போது வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Love for #Vaathi / #SIRMovie is UNSTOPPABLE ❤️
The film has crossed a massive 1️⃣0️⃣0️⃣ crores gross worldwide 🌎
Thank you all for the phenomenal support 😇@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @SitharaEnts @7screenstudio pic.twitter.com/GOKevvLQo4
— Sithara Entertainments (@SitharaEnts) March 4, 2023
🙏🙏🙏 pic.twitter.com/Ps8QK9lWOI
— Dhanush (@dhanushkraja) March 4, 2023
இந்த படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழில் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் வெளியிட்டிருந்தது. தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhanush