முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷின் நடிக்கும் வாத்தி படத்தின் பாடல்கள் வெளியானது

ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷின் நடிக்கும் வாத்தி படத்தின் பாடல்கள் வெளியானது

வாத்தி

வாத்தி

மொத்தம் 5 பாடல்கள் வாத்தி ஆல்பத்தில் உள்ளன. வா வாத்தி எனத் தொடங்கும் பாடலை தனுஷ் எழுத, ஸ்வேதா மோகன் பாடியுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்திலிருந்து பாடல்கள் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் படங்களைத் தொடர்ந்து தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் குமார் கூட்டணியில் வாத்தி படத்தின் ஆல்பம் வெளிவந்துள்ளது. வாத்தி படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி இந்த படத்தை இயக்கியுள்ளார். வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

மொத்தம் 5 பாடல்கள் வாத்தி ஆல்பத்தில் உள்ளன. வா வாத்தி எனத் தொடங்கும் பாடலை தனுஷ் எழுத, ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். நாடோடி மன்னன் என்ற பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இதனை அந்தோனி தாசன் பாடியுள்ளார். இதைத் தவிர்த்து கலங்குதே, ஒன் லைஃப், சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. டிராமா ஜானரில் ஃபீல் குட் மூவியாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாத்தி படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

' isDesktop="true" id="885297" youtubeid="-3-oLEWQ5Tg" category="cinema">

இம்மாதம் 17 ஆம் தேதி வாத்தி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படம் பீரியட் ஆக்சன் ஜானரில் உருவாகி வருகிறது. இதில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

First published:

Tags: Dhanush